Srivaishnavam Practices Essence

Home »  Rg (Rig) Veda Upakarma Sankalpam 07.08.2016 Procedures in Tamil Unicode Fonts

  Text Size   

Jaya Jaya Sri Sudarsana !

Sri Sudarsana Chakram, The Lord's powerful Cosmic wheel.

Jaya Jaya Sri Sudarsana !

ரிக்வேதிகள் உபாகர்ம.

 

ஸ்நானம், நித்யானுஷ்டான்ம். பிறகு யக்ஞோபவீத தாரணம்.கை கால்கள் அலம்பி, ஆசனமம் செய்து இரண்டு புல் பவித்ரம் - இடுக்குப்புல் தரித்து ப்ராணாயாமம் செய்யவும். பின்னர் கைகூப்பி:

ததேவ லக்னம், ஸுதினம் ததேவதாராபலம் சந்த்ரபலம் ததேவ

வித்யாபலம் தைவபலம் ததேவ

லக்ஷ்மிபதே அங்ரியுகம் ஸ்வமராமி

 வடகலையார்: -அஸ்மத் குருப்யோ நம: ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிககேசரீ. வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி | குருப்ய: தத் குருப்யஸ் ச ந்மோவாகே ம்தீமஹே, வ்ருணீ மஹேச தத்ராத்யௌ தம்பதீ ஜகதாம்பதீ, ச்வசேஷபூதேன மயாஸ்வீயை: ஸரவபரிச்சதை, விதாதும் ப்ரீதமாத்மானம் தேவ ப்ரக்ரமதே ஸ்வயம்.

ஐயங்கார் - வடகலை , தென்கலை மற்றும் ஸ்மார்த்தாள் (ஐயர்) - எல்லோருக்கும் பொது :ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்னோப சாந்தயே

யஸ்யத்விரத வக்ராத்யா பாரிஷத்யா பரச்சதம்

விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ர்ரயே

 என்று சொல்லி, பிறகு வலது தொடை மீது இடது உள்ளங்கை மேல் வைத்துகொண்டு கீழே உள்ளபடி ஸங்கல்பத்தை கூறவும்:

ஹர்ரிஹரோந்தத்ஸத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்வேதவரஹகல்பே, வைவஸ்த மன்வந்த்தரே, கலியுகே ப்ரதமே பாதே, பாரதவர்ஷே . பரதக்கண்டே சகாப்தே மேரோர் தக்ஷிணே பார்ச்வே: அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே -

துன்முகி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே, க்ரீஷ்ம ரிதௌ, கடக மாஸே, சுக்ல பக்ஷே, பஞ்சம்யாம் ஸுபதிதௌ, பானு வாஸர, ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் பஞ்சம்யாம் ஸுபதிதௌ. ஸ்ரீ பகவதாக்ஞா _______@1___#2____*3_________________@1---(வடகலையார் - ) ஸ்ரீமன் நாராயண ப்ரீதியர்த்தம்#2-- (தென்கலையார் ) பகவத் கைங்கர்ய ரூபம்*3-- (ஸ்மார்த்தாள்) - பார்வதீ பரமேச்வர ப்ரீதியர்த்தம்(என்று மாற்றி சொல்லிக்கொள்ளவ்வும் )ஸ்ராவண்யாம் ச்ரவண ந்க்ஷத்ரே அதீதானாம் ச்சந்தஸாம், அத்யேஷ்ய மாணானாம் அயாதயாமத்வாய வீர்ய வர்த்தார்த்தம் ஸ்ராவண்யாம் ச்ரவண நக்ஷத்ரே, அத்யாய உத்ஸர்ஜன கர்மாங்கம், கரிஷ்யமாண உபாகர்மாங்கம், ப்ரம்ம யக்ஞ தர்ப்பணம், ஸாவித்ரியாதி நவ தர்ப்பணம் அக்ந்யாதி ஏகவிம்சத் தர்ப்பணம்ச அத்ய கரிஷ்யே: (என்று கூறி இடுக்குப் புல்லை மட்டும் வடக்கில் போடவும்).

பிறகு வடக்கு நோக்கி குந்தியவாறு அமர்ந்து நனைத்த அரிசியை எடுத்து இரண்டு கை நுனிவிரல்கள் வழியாக தீர்த்தம் சேர்த்து கீழ்கணட மந்த்ரங்களை கூறி கீழே சேர்க்கவும்:

(1) பூணூல் உபவீதம்:

ப்ரஜாபதிஸ் த்ருப்யது

ப்ரஹ்ம்மா த்ருப்யது

வேதாஸ் த்ருப்யந்து

தேவாஸ் த்ருப்யந்து

ரிஷயஸ் த்ருப்யந்து

ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யது

ஓம்காரஸ் த்ருப்யது

வஷ்ட காரஸ் த்ருப்யது

வ்யாஹ்ருதயஸ் த்ருப்யது

ஸாவித்ரீ த்ருப்யது

யஜ்ஞாஸ் த்ருப்யது

த்யாவா ப்ருதிவீ த்ருப்யதாம்

அந்தரிக்ஷந் த்ருப்யது

அஹோராத்ராணி த்ருப்யந்து

ஸாங்க்யாஸ் த்ருப்யந்து

ஸித்தாஸ் த்ருப்யந்து

ஸமுத்ராஸ் த்ருப்யந்து

ந்த்யாஸ் த்ருப்யந்து

காவஸ் த்ருப்யந்து

கிரயஸ் த்ருப்யந்து

க்ஷேத்ரௌஷதி வனஸ்பதி

கந்தர்வாஸ் த்ருப்யந்து

நாகாஸ் த்ருப்யந்து

பயாம்ஸி த்ருப்யந்து

விப்ராஸ் த்ருப்யந்து

யக்ஷாஸ் த்ருப்யந்து

ரக்ஷாம்ஸி த்ருப்யந்து

பூதாநி த்ருப்யந்து

ஏவமந்தானி த்ருப்யந்து

(2) தாவடமாக் (நீவிதி) பிடித்துக்கொண்டு அரிசி/தீர்த்தம் கொண்டு இரண்டு கைகளுக்கு நடுவில் தர்ர்ப்பிக்கவும்:

ஸதர்சினஸ் த்ருப்யது

மாத்யமாஸ் த்ருப்யது

க்ருத்ஸமதஸ் த்ருப்யது

விச்வாமித்ராஸ் த்ருப்யது

வாமதேவஸ் த்ருப்யது

அத்ரிஸ் த்ருப்யது

பாரத்வாஜய்ஸ் த்ருப்யது

வஸிஷ்டஸ் த்ருப்யது

ப்ரகாதஸ் த்ருப்யந்து

பாவமான்யாஸ் த்ருப்யந்து

க்ஷூத்ரஸூக்தாஸ் த்ருப்யது

ஸுமந்து ஜைமிநி வைசம்பாயன பைல ஸுக்ர பாஷ்ய பாரத மஹாபாரத தர்மாசார்யாஸ் த்ருப்யது

ஜானந்தீ பாஹவீ கார்க்ய கௌதம சாகல்ய பாப்ரவ்ய மாண்டவ்ய மாண்டூகேயாஸ் த்ருப்யது

கர்கீ வாசக் நவீ த்ருப்யது

வடவா ப்ராதி தேயீ த்ருப்யது

ஸுலபா மைத்ரேயீ த்ருப்யது

கஹோளாந் தர்ப்பயாமி

கௌஷீகந் தர்ப்பயாமி

மஹா கௌஷீதகன் தர்ப்பயாமி

பாரத்வாஜன் தர்ப்பயாமி

பைங்கன் தர்ப்பயாமி

மஹா பைங்கன் தர்ப்பயாமி

ஸுயஜ்ஞந் தர்ப்பயாமி

ஸாங்யாயனன் தர்ப்பயாமி

ஐதரேயந் தர்ப்பயாமி

மஹைதரேயந் தர்ப்பயாமி

ஸாகலந் தர்ப்பயாமி

பாஷ்கலந் தர்ப்பயாமி

கார்க்யந் தர்ப்பயாமி

சௌமந் தர்ப்பயாமி

ஸுஜாதவக்த்ரன் தர்ப்பயாமி

ஔதவாளஹிந் தர்ப்பயாமி

மஹௌதவாள்ஹிந் தர்ப்பயாமி

ஸௌஜாமிந் த்ருப்யந்து த்ருப்யந்து

ஸௌநகந் தர்ப்பயாமி

ஆஸ்வ்வலாயந் தர்ப்பயாமி

ஏசாந்யே ஆசார்யா தேஸர்வே த்ருப்யந்து த்ருப்யந்து, த்ருப்யந்து.

(3) பூணூலை உபவீதமாக (வழ்க்கம்போல்) அணிந்து கை நுனி விரல்களால் தர்ப்பிகவும்:

ஸாவித்ரீந் தர்ப்பயாமி

ப்ரஹ்மாப்ணந் தர்ப்பயாமி

மேதாந் தர்ப்பயாமி

ப்ரஜ்ஞாந் தர்ப்பயாமி

தாரணான் தர்ப்பயாமி

ஸதஸச்பதிம் தர்ப்பயாமி

அனுமதிந் தர்ப்பயாமி

சாந்தாம்ஸ்ய தர்ப்பயாமி

அக்நிந் தர்ப்பயாமி

அப்த்ரிண் ஸூர்யந் தர்ப்பயாமி

ஸகுந்தந் தர்ப்பயாமி

மித்ரவருணௌ த்ருப்யேதாம்

அக்னிந் தர்ப்பயாமி

ஆபஸ் த்ருப்யது

அக்நிந் தர்ப்பயாமி

மருதஸ் தர்ப்பயாமி

அக்நிந் தர்ப்பயாமி

வர்மாணந் தர்ப்பயாமி

அக்நிந் தர்ப்பயாமி

இந்த்ரா ஸோமௌ த்ருப்யதாம்

இந்த்ரன் தர்ப்பயாமி

அக்னி மாருதன் தர்ப்பயாமி

பவமான ஸோமௌ த்ருப்யதாம்

ஸோமந் தர்ப்பயாமி

ஸமஜ்ஞானந் தர்ப்பயாமி

விச்வேதேவாஸ் த்ருப்யந்து

அக்பிஸ் த்ருப்யது

விஷ்ணுஸ் த்ருப்யது

(4) தகப்பனார் இல்லாதவர்களுக்கு மட்டும் கீழ்கண்ட பித்ரு தர்ப்பணம் எள்ளும் தீர்த்தமும் கொண்டு வலது கை கட்டை விரல் வழியாக தர்ப்பிக்கவும்: மூன்று பில் பவித்ரம் அணிந்து கீழ்கண்டபடி ஒரு முறை தர்ப்பிக்கவும்:

பித்ரு வர்க்கம் - பிதா, பிதாமஹர், ப்ரபிதாமஹர் - மாதா, பிதாமஹி, ப்ரபிதாமஹி மாத்ருவர்க்கம் - ஸபத்நீக மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹ

பவித்ரத்தை அவிழ்த்து பிரித்துவிட்டு, ஆசனமம் செய்யவும்.

வேதாரம்பம்- உங்கள் குரு/வாத்யார்/ஆசார்ப்யன் பெருமாள் பெரியவர்களை ஸேவித்து ஆசி பெறவும்.

 

: ஸுபம் :

 

TRS Iyengar


Links Privacy Policy Terms & Conditions Disclaimer Contact Support This website Site Map
Copyright © trsiyengar.com 2003-2017